Thursday 26 August 2021

மொழி அறிவோம் - 13

Simple Present - 1

முதல் tense வகை, Simple Present.

எந்த சூழ்நிலைகளில் எல்லாம் simple present வகை வாக்கியங்களை பயன்படுத்துவோம்?
 
1. மாற்றம் இல்லாத விஷயங்கள், பொதுவாக நடக்கும் விஷயங்கள் - Permanent situations, General actions

Eg: Chennai is the capital of Tamilnadu.
I work in city.

2. திரும்பத் திரும்ப நடக்கும் விஷயங்கள்- Things which happen often or repeatedly 

Eg: I visit my grandparents in village every summer.

3. அறிவியல் உண்மைகள் -  Facts of nature or science 

Eg: Birds migrate in winter.

4. கால அட்டவணைகள் - Timetables 

Eg: The bus departs at 9.00 AM. 

சரி, இந்த Simple Present வாக்கியங்களை எப்படி உருவாக்குவது?

கீழ்கண்ட 3 வகை வாக்கியமாகவும் எப்படி Simple Present tense sentenceஐ உருவாக்குவது என்று பார்க்கலாம். 
1. Positive sentence
2. Negative sentence
3. Interrogative (Question) sentence

ஒவ்வொரு sentenceக்கும் ஒரு structure இருக்கு. முதல்ல இந்த வார்த்தை தான் வரனும், அப்படி முதல்ல இது வந்தா, இரண்டாவது அது சம்மந்தப்பட்ட வார்த்த தான் வரனும்னு. 

அத ஞாபகம் வச்சு, சரியா follow பண்ணாலே, பல தவறுகள தவிர்த்துடலாம்.

1. Positive sentence 

Subject (I, we, you, they ) + Main verb
Eg: I work

Subject (He, She, It) + Main verb (with s)
Eg: He works

2. Negative sentence

Subject (I, we, you, they ) + do + not + main verb
Eg: I do not visit

Subject (He, She, It) + does + not + main verb
Eg: She does not visit

3. Interrogative (Question) sentence

Do + Subject (I, we, you, they ) + Main Verb?
Eg: Do I visit?

Does + Subject (He, She, It) + Main Verb?
Eg: Does she visit?

Subject: எதைப் பற்றி அங்கு பேசுகிறோமோ, அதுவே subject. 
Verb: செயலைக் குறிக்கும் வார்த்தை

சரி simple present tense அவ்வளவு தானா! இன்னும் இருக்கே :) மீதத்தை அடுத்த போஸ்டில் பார்க்கலாம்.




மொழி அறிவோம் - 12

Tenses - காலம்

ஒரு விஷயம் எப்போ நடந்தது அப்படினு, அத பத்தி பேசற வாக்கியத்துல இருக்க காலத்த வச்சு தான் புரிஞ்சுப்போம்.

காலம் 3 வகையானது. அதாவது 3 tenses இருக்கு.

1. Present Tense (நிகழ் காலம்)
2. Past Tense (கடந்த காலம்)
3. Future Tense (எதிர் காலம்)

ஒவ்வொரு tenseலயும் 4 பிரிவு இருக்கு. 

1. Simple
2. Continuous
3. Perfect
4. Perfect Continuous

அதாவது ஒரு செயல், குறிப்பிட்ட காலத்துலயும், exactஆ எப்ப நடந்ததுனு புரிஞ்சுக்க உதவும்.

எடுத்துக்காட்டா, 
Present Continuous எடுத்துப்போம்.

Presentன்னா நிகழ்காலத்துல நடக்கறது. அத இன்னும் குறிப்பா எப்போ நடக்குதுனு சொல்ல continuous பிரிவ எடுத்துக்குறோம்.

Continuousன்னா, நடந்துட்டே இருக்கறது.

அப்போ, நிகழ்காலத்துல நடந்துட்டே இருக்க செயல், Present Continuous. 

அடுத்த postல இருந்து, ஒவ்வொரு tenseஐயும், தனித்தனியா பார்ப்போம்.

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...