Friday 21 April 2017

காதல்மிகை


திரைப்படத்தில் கதாநாயகர்கள் சண்டையிட்டு கொண்டே, காதலை சொல்லும் காட்சிகள் கண்டு அலட்சிய புன்னகை சிந்தி கடந்திருக்கிறேன்..
நீயோ உன் நண்பனுடன் வாதத்தில் இருக்கையில், இடையிடையில் கடைக்கண்ணால் சிந்தும் காதலில் அக்காட்சிகளின் கற்பனை தொடக்கத்தை தெரிந்து கொண்டேன்..
#கள்வன் #காதல்காரி

Tuesday 11 April 2017

ஆசை


உன் அரைத்தூக்க காதல் மொழிகளை
கேட்கவே, உறங்கிவிட்டாய் என தெரிந்த பிறகு அழைக்க வேண்டும்...
"இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் மா" என்ற கொஞ்சல் மொழிகளை கேட்க, அரைமணிநேரம் முன்னதாகவே எழுப்பி விட வேண்டும்..
சின்ன சின்னதாய் தவறுகள் செய்து, உன் கோப மொழிகள் கேட்டிட வேண்டும்..
சமைக்கையில் கொஞ்சம் அதிகமாய் காரம் சேர்த்திட வேண்டும்..
திட்டினாலும் சரி என்று உன்னையும் சேர்த்து மழையில் இழுத்து விட வேண்டும்...
சாகும் வரை நம் காதல் டைரியில் இப்படி சில குறிப்புகளை அனுதினமும் சேர்த்திட வேண்டும்..

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...