Saturday 21 April 2018

அவன் நடந்த பாதை ❤


நான் தினமும் நடந்த பாதையில் ஒரு நாள் அவன்...
மறுநாளெல்லாம் நடக்க நடக்க வலி கூடி நெஞ்சைத் தின்று உயிர் கொன்றெடுத்தது..
அவன் நினைவால்..
நினைவேதும் இல்லாமல் நடக்க முயன்று தோற்ற சில கணங்கள்..
பாடல்கள் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தேன்..

ஏனோ சில நாட்களாய் வெட்கம் பிடுங்கி தின்கிறது...
அதே பாதை ❤❤ 

Monday 16 April 2018

உன்னுடனான நாட்கள்


சந்திக்கும் நாளுக்கு கொஞ்சம் முன், நாட்கள் வெகு வேகமாய் போய் தொலைய நினைப்பதும்..
கண்கள் சந்தித்த நொடி முதல், உலகமே அசைவற்று அவ்வாறே நின்று விட ஆசை கொள்வதும்..
அந்த நாள் கடந்த பின், அந்நாளை விட்டு தள்ளிபோக விருப்பம் கொள்ளாமல், மெல்லச் செல்ல ஏக்கம் கொள்ளவதுமாய்..
உன்னை சுற்றிய நாட்கள் ❤❤

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...