Saturday 7 March 2020

கொஞ்சம் பொய், கொஞ்சும் காதல் - 5


ட்விஸ்ட்டான காதல் சொல்லல் என்னன்னா, வீட்டுல சொல்ற வரைக்குமே நாங்க லவ் பண்றோம்னு ஒருத்தருக்கு ஒருத்தரே சொல்லிக்கல.. தில்லானா மோகனாப்பாள் ட்ரெயின் சீன்ல கூட கண்ணால தான் பேசுனாங்க. நாங்க போன ஆன்ல வச்சுக்கிட்டு மனசாலயே பேசுனவங்க..

இப்போவும் அப்பப்போ நலந்தானா நலந்தானானு கண்ணால பேசிக்குறோம்.. கிகி.. 

இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்குனு கன்பார்மா தோணின உடனே, எங்காளு வீட்ல சொல்ல ரெடி ஆயிடாப்ல.. அடுத்ததா வந்தது தீபாவளி லீவு..

நானோ வீட்ல இப்ப சொல்லலாமா வேண்டாமா? எப்ப சொல்லாம்ங்கற குழப்பத்துல..

லவ் யூங்கற வார்த்தையவே சொல்லலயே, வீட்ல என்னத்த சொல்றது? சரி, சொன்னா அவங்ககிட்ட என்ன மாதிரியான ரியாக்சன்ஸ் இருக்கும்னு பேசிக்க ஆரம்பிச்சுட்டோம்.

நிறைய குழப்பங்கள்.. சரி எதுவா இருந்தாலும் சேர்ந்தே பாத்துப்போம்னு ஒரு மனசு. மனோவ பத்தி அதிகம் தெரியாதேனு சைட்ல ஒரு குறுகுறுப்பு வேற..

அப்போ வந்த தீபாவளியில, சொன்னோமா இல்லியா?

*தொடரும்*

கொஞ்சம் பொய், கொஞ்சும் காதல் - 6


தீபாவளியில மனோ மட்டும் அவங்க வீட்ல சொல்லிட்டாங்க. அவங்க வீட்ல சரினு சொன்ன அப்பறம் நாம சொல்லிக்கலாம்னு நான் அமைதியா இருந்துட்டேன்.

சரி பாத்துக்கலாம் ஒரு வருஷம் பொறுங்கனு சொன்னதால, நாங்களும் அதுக்கப்புறம் அந்த டென்ஷன விட்டுட்டு ஜாலியா இருந்தோம்.

கிட்டதட்ட சரினு சொன்ன மாதிரி பேசுன உடனே, நானும் எங்க வீட்ல சொல்லிட்டேன். எப்பவும் பெரிசா மூட நம்பிக்கைகள், ஹிட்லராச்சினு எல்லாம் எதுவுமில்லாம, மனுசன் மனசுக்கு மட்டும் மதிப்பு குடுத்து முடிவெடுக்கறவங்க அப்படிங்கறதால டக்குனு சமாதான படுத்தியாச்சு. குட்டைய குழப்பற சொந்தக்காரனயும் வேற அண்ட விடமாட்டாங்க. ஆனாலும் எங்க அப்பாவுக்கு சின்ன குழப்பம். 

இப்போ தான் ஜோசியக்காரங்க என்ட்ரி. இந்த 2 ஜாதகத்துக்கும் பொருத்தம் இல்ல, 1 வாரம்கூட சேர்ந்திருக்க மாட்டாங்க. 3 மாசமெல்லாம் கன்பார்ம் பிரிஞ்சிருவாங்க. சண்டையான சண்ட போடுவாங்கனு பீதிய கெளப்பிட்டாங்க. கூட இருக்கறது எல்லாருக்கும் ஏற்கனவே இப்படி லவ் பண்ணி பிரிஞ்சவங்க ஸ்டோரி எல்லாம் நியாபகம் வரத் தொடங்குனுச்சு. இப்ப அவங்க அப்பாவுக்கும் அதே சின்ன குழப்பம். எங்களுக்கு அதுல நம்பிக்கை இல்லாததால அந்த விஷயங்கள் பாதிக்கல. ஆனா எல்லாருக்கும் அப்படி இருக்காதில்லயா?

குழப்பங்கள் என்ன செஞ்சது?

*தொடரும்*

கொஞ்சம் பொய், கொஞ்சும் காதல் - 7


இப்ப தொடங்குனது நிஜமான ஆட்டம். எல்லாருக்கும் குழப்பம் வந்துட்டா சும்மா இருப்பாங்களா? நம்மளையும் சேர்த்து குழப்பறது தானே, நம்மாட்களோட தனி சிறப்பே! 

பெற்றவர்களைத் தவிர ஆளாளுக்கு அட்வைஸ்கள், கருத்துகள்னு காது கரிதுணி கிடைச்சா கூட அடைச்சுகற அளவுக்கு ஆக்கி விட்டாங்க.

ஏன்னா, அவங்களுக்கு மனோ புதுசு, எதுவும் தெரியாது. ஆனா பழகின எனக்கு கொஞ்சமாவது தெரியுமில்லையா? அதுவும் மனோ ஒவ்வொரு விஷயத்துக்கும் காட்ற பொறுமையும், யோசிச்சு செய்யற நிதானப்போக்கும் இன்னும் நம்பிக்கைய தான் கூட்டுனுச்சு.

நேர்லயே அதிகம் சந்திக்காத, பெரும்பாலும் பேஸ்புக்ல மட்டுமே தெரிஞ்சுகிட்ட எனக்கு எப்படி அப்படிபட்ட நம்பிக்கை வந்தது?

இவங்க போஸ்ட், கமென்ட்னு முதல்ல ஒரு கலகலப்பு இருந்தாலும், மொதல்ல உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செஞ்சது. பெண்கள்ன்னு எங்கயாவது போட்டுட்டாலே, களமாடறாப்லயே, அவ்வளவு பெரிய ஆணாதிக்கவாதியானு 😂

ஆனா பழக பழக, நிஜமான இந்த ஆள் சுட்டெடுத்த பெண்ணியவாதி டோய்னு புரிஞ்சு போச்சு. எங்க வீட்ட பொறுத்த வரையில யாரும் யாரோட சுதந்திரத்துலயும் தலையிட மாட்டாங்க. தேவைப்படும் போது suggestions மட்டுமே கிடைக்கும். 

அதுனால என்னோட சுதந்திரம்னு நான் நினைக்கற விஷயங்கள்ல யாராவது இம்மியளவு தலைய  நீட்டுனாலும் அவங்கள என்னோட மனசுல இருந்து விரட்டிருவேன். (மனசுல இருந்தா தானே இவங்க இப்படி சொல்லிட்டாங்களேனு வருத்தம் வரும்). 

இன்னிக்கு வரைக்கும் மனோ அப்படி ஒரு சுதந்திர அத்துமீறல செஞ்சதே இல்ல. எனக்கு பிடிச்ச விஷயங்கள செய்றேன். பிடிச்ச மாதிரி இருக்கேன்.

இன்னும் சொல்லனும்னா, தாலி போடறது, குங்கும்ம் வைக்கறதுனு சமுதாயம் கட்டாயப்படுத்தும் விஷயங்கள் கூட, என் சார்ந்த விஷயமா இருக்கறதால, போடலாமா வேணாமா, எங்க போடலாம் வேணாம்னு முடிவு பண்ற சுதந்திரம் என்கிட்டயே தான் இருக்கு. 

இப்படி இதுக்கு முன்னாடியும் என் சம்மந்தப்பட்ட விஷயங்களின் முடிவு என்கிட்டயேவும், இருவர் சம்மந்தப்பட்ட விஷயங்கள் ஆலோசித்தும் தான் எடுக்கறோம்னா, அது கண்டிப்பா என் அம்மா வீட்ட தக்க வச்சுக்கற மாதிரியே தான? இந்த மனுஷன எப்படி நம்பாம இருக்க முடியும்?

அடுத்த நடந்தத அடுத்ததுல சொல்றேன் :) 

*தொடரும்*

கொஞ்சம் பொய், கொஞ்சும் காதல் - 4


என்ன தான் காதல பேசிக்கலனாலும், பொத்தி வச்ச புகை மாதிரி ரிலீஸ் ஆகத்தானே செய்யும். அப்படி கொஞ்சம் கொஞ்சம் வெளிப்படையாவே பேசிக்க ஆரம்பிச்சோம்.

பொதுவான விஷயங்கள், விருப்பங்கள், சேர்ந்திருந்தா எப்படி இருக்கும், இன்னும் நிறைய.. எல்லாரும் இதையே தான் பேசுவாங்கன்னாலும், நாம பேசும் போது புதுசா தானே இருக்கும்.

கலாய்ச்சுகிட்டே பேசிகிட்டு இருந்தோம். இன்னிக்கு வரைக்கும் என்ன சண்டைன்னாலும் இடை இடையில கலாய்க்காம இருக்கறதில்ல.. கடுப்பா கலாய்க்கறது ஒரு பழக்கமாவே கூட ஆச்சு போல..

என்ன தான் பவ்யம்ன்னாலும், நல்லா பேச ஆரம்பிச்ச அப்புறம் நமக்குள்ள இருக்க வித்தியாசங்கள் தெரிய வருமில்லையா.. ஆனா இரண்டு பேருமே அதுக்கு முட்டு குடுக்காம, நான் இப்படிதான்னு சொல்ற ஆளுங்க.

அது ஏற்கனவே எனக்கு புரிஞ்சிருந்தது. பெரிய சண்டைகள, கோபங்களை எதிர்பார்த்திருந்த எனக்கு, பெரிய சர்ப்ரைஸ். எதையுமே பெரிசா அலட்டிக்காம, அப்படி தான்னு நிறைய விஷயங்கள நாங்க கடந்து போக ஆரம்பிச்சிருந்தோம். கொஞ்ச நாள் கழிச்சு கவனிக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதுக்கு முக்கியமான ஒரு விஷயம்னா, மனோவோட ஏத்துக்கற மனசு தான். தப்ப சரியா சுட்டி காட்டுனா, சினிமா மாதிரி டக்குனு மாறிடுவாப்ல..

சரி இது காதல் தான்னு முடிவாச்சு.. ஆனா யாராவது ஒருத்தர் வாயத்திறந்து விஷயத்து போட்டு உடைக்கனும்ல.. அங்க தான் இருந்தது பெரிய ட்விஸ்ட்டு!

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...