என்ன தான் காதல பேசிக்கலனாலும், பொத்தி வச்ச புகை மாதிரி ரிலீஸ் ஆகத்தானே செய்யும். அப்படி கொஞ்சம் கொஞ்சம் வெளிப்படையாவே பேசிக்க ஆரம்பிச்சோம்.
பொதுவான விஷயங்கள், விருப்பங்கள், சேர்ந்திருந்தா எப்படி இருக்கும், இன்னும் நிறைய.. எல்லாரும் இதையே தான் பேசுவாங்கன்னாலும், நாம பேசும் போது புதுசா தானே இருக்கும்.
கலாய்ச்சுகிட்டே பேசிகிட்டு இருந்தோம். இன்னிக்கு வரைக்கும் என்ன சண்டைன்னாலும் இடை இடையில கலாய்க்காம இருக்கறதில்ல.. கடுப்பா கலாய்க்கறது ஒரு பழக்கமாவே கூட ஆச்சு போல..
என்ன தான் பவ்யம்ன்னாலும், நல்லா பேச ஆரம்பிச்ச அப்புறம் நமக்குள்ள இருக்க வித்தியாசங்கள் தெரிய வருமில்லையா.. ஆனா இரண்டு பேருமே அதுக்கு முட்டு குடுக்காம, நான் இப்படிதான்னு சொல்ற ஆளுங்க.
அது ஏற்கனவே எனக்கு புரிஞ்சிருந்தது. பெரிய சண்டைகள, கோபங்களை எதிர்பார்த்திருந்த எனக்கு, பெரிய சர்ப்ரைஸ். எதையுமே பெரிசா அலட்டிக்காம, அப்படி தான்னு நிறைய விஷயங்கள நாங்க கடந்து போக ஆரம்பிச்சிருந்தோம். கொஞ்ச நாள் கழிச்சு கவனிக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதுக்கு முக்கியமான ஒரு விஷயம்னா, மனோவோட ஏத்துக்கற மனசு தான். தப்ப சரியா சுட்டி காட்டுனா, சினிமா மாதிரி டக்குனு மாறிடுவாப்ல..
சரி இது காதல் தான்னு முடிவாச்சு.. ஆனா யாராவது ஒருத்தர் வாயத்திறந்து விஷயத்து போட்டு உடைக்கனும்ல.. அங்க தான் இருந்தது பெரிய ட்விஸ்ட்டு!
No comments:
Post a Comment