Thursday, 24 September 2020

மொழி அறிவோம் - 10

 Slippery slope


வழுக்குற மாதிரி இருக்கக்கூடிய சரிவான பகுதி


இத எப்படி ஒரு sentenceல பயன்படுத்துவோம்னு பாக்கறதுக்கு முன்னாடி, அப்படி ஒரு வழுக்கு சரிவுல நின்னா என்னாகும்னு யோசிச்சு பாருங்க.


வழுக்கிட்டு கீழ வரைக்கும் போயி இடுப்பொடிச்சுட்டு உட்கார்ந்துட்டு இருப்போம்ல. இதே அர்த்தத்துல தான் sentenceலயும் பயன்படுத்துவோம்.


ஆரம்பத்துல தப்பு பண்ணுட்டா, கடைசி வரைக்கும் அவ்ளோதான் அப்படினு சொல்லும்போதும்,


யாராவது வந்து காப்பத்தலான நம்ம கதி அதோகதிதான்னு சொல்ற இடங்கள்லயும், slippery slope பயன்படுத்தலாம்.


Eg: His behavior will lead him down a slippery slope to ruin


அவனோட இந்த பழக்கம் அவன உருப்படி இல்லாத இடத்துல தான் கொண்டு நிறுத்தப்போகுது.


Having a glass of wine at morning is a slippery slope - you'll end up finishing the whole bottle by the end of the evening.


காலையில ஒரு க்ளாஸ் வைன் குடிக்கலாம்னு ஆரம்பிச்சினா, சாயங்காலத்துக்குள்ள முழு பாட்டிலயும் முடிச்சிருவ. 


எவனாலயும் காப்பாத்த முடியாது, கம்முனு கெடனு சொல்றாங்க.


3 comments:

  1. இந்த இடியம்க்கு இணையா தமிழ்ல முதல்கோணல் முற்றிலும் கோணல்னு சொல்ற சொலவடைய வச்சுக்கலாம் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. அப்படி புரிஞ்சுக்கலாம். எடெத்துக்காட்டா சொல்லலாம். ஆனா அதோட இடத்துல இந்த சொலவடைய பயன்படுத்த முடியாது.

      Delete

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...