Saturday 4 September 2021

மொழி அறிவோம் - 14

Simple Present - 2

பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம்.

Simple Present tenseல 'be verb' main verbஆ இருந்தா sentence எப்படி இருக்கும்னு பாப்போம்.

சரி be verbன்னா என்ன?
be, am, is, are, was, were, being, been.  இது எல்லாமே be verb தான்.

Simple Present tenseல am, is, are அப்படிங்கற 3 be verb மட்டும் தான் வரும்.

இந்த மாதிரி am, is, are வரக்கூடிய Simple Present tense sentenceக்கு என்ன sentence structure இருக்கும்?

Sentence structure

subject + main verb be (am, is, are)

Positive Sentence

• I + am

அதாவது I அப்படிங்கற subject வரும்போது, அதைத் தொடர்ந்து வர be verb, 'am' தான்.

Eg: I am Indian

• You, we, they + are
You, we, theyக்கு அடுத்து வர be verb, 'are' மட்டும் தான்.

Eg: You are French

• He, she, it + is
He, she, it க்கு அடுத்து வர be verb, 'is' தான்.

Eg: He is French

Negative sentence

இந்த sentenceகளுக்கும் அதே positive sentenceக்கு வர sentence structure தான்.

ஆனா, be verbக்கு அப்புறம் not வரும்.

Eg:
I + am + not + French.
You, we, they + are + not + French
He, she, it + is + not + French

Question Sentence

இதுவும் positive sentence இருக்க structure மாதிரி தான். ஆனா be verbஅ முதல்லயும், subjectஅ இரண்டாவதும் போடனும்.

Am + I + late?
Are + you, we, they + late?
Is + he, she, it + late? 

Thursday 26 August 2021

மொழி அறிவோம் - 13

Simple Present - 1

முதல் tense வகை, Simple Present.

எந்த சூழ்நிலைகளில் எல்லாம் simple present வகை வாக்கியங்களை பயன்படுத்துவோம்?
 
1. மாற்றம் இல்லாத விஷயங்கள், பொதுவாக நடக்கும் விஷயங்கள் - Permanent situations, General actions

Eg: Chennai is the capital of Tamilnadu.
I work in city.

2. திரும்பத் திரும்ப நடக்கும் விஷயங்கள்- Things which happen often or repeatedly 

Eg: I visit my grandparents in village every summer.

3. அறிவியல் உண்மைகள் -  Facts of nature or science 

Eg: Birds migrate in winter.

4. கால அட்டவணைகள் - Timetables 

Eg: The bus departs at 9.00 AM. 

சரி, இந்த Simple Present வாக்கியங்களை எப்படி உருவாக்குவது?

கீழ்கண்ட 3 வகை வாக்கியமாகவும் எப்படி Simple Present tense sentenceஐ உருவாக்குவது என்று பார்க்கலாம். 
1. Positive sentence
2. Negative sentence
3. Interrogative (Question) sentence

ஒவ்வொரு sentenceக்கும் ஒரு structure இருக்கு. முதல்ல இந்த வார்த்தை தான் வரனும், அப்படி முதல்ல இது வந்தா, இரண்டாவது அது சம்மந்தப்பட்ட வார்த்த தான் வரனும்னு. 

அத ஞாபகம் வச்சு, சரியா follow பண்ணாலே, பல தவறுகள தவிர்த்துடலாம்.

1. Positive sentence 

Subject (I, we, you, they ) + Main verb
Eg: I work

Subject (He, She, It) + Main verb (with s)
Eg: He works

2. Negative sentence

Subject (I, we, you, they ) + do + not + main verb
Eg: I do not visit

Subject (He, She, It) + does + not + main verb
Eg: She does not visit

3. Interrogative (Question) sentence

Do + Subject (I, we, you, they ) + Main Verb?
Eg: Do I visit?

Does + Subject (He, She, It) + Main Verb?
Eg: Does she visit?

Subject: எதைப் பற்றி அங்கு பேசுகிறோமோ, அதுவே subject. 
Verb: செயலைக் குறிக்கும் வார்த்தை

சரி simple present tense அவ்வளவு தானா! இன்னும் இருக்கே :) மீதத்தை அடுத்த போஸ்டில் பார்க்கலாம்.




மொழி அறிவோம் - 12

Tenses - காலம்

ஒரு விஷயம் எப்போ நடந்தது அப்படினு, அத பத்தி பேசற வாக்கியத்துல இருக்க காலத்த வச்சு தான் புரிஞ்சுப்போம்.

காலம் 3 வகையானது. அதாவது 3 tenses இருக்கு.

1. Present Tense (நிகழ் காலம்)
2. Past Tense (கடந்த காலம்)
3. Future Tense (எதிர் காலம்)

ஒவ்வொரு tenseலயும் 4 பிரிவு இருக்கு. 

1. Simple
2. Continuous
3. Perfect
4. Perfect Continuous

அதாவது ஒரு செயல், குறிப்பிட்ட காலத்துலயும், exactஆ எப்ப நடந்ததுனு புரிஞ்சுக்க உதவும்.

எடுத்துக்காட்டா, 
Present Continuous எடுத்துப்போம்.

Presentன்னா நிகழ்காலத்துல நடக்கறது. அத இன்னும் குறிப்பா எப்போ நடக்குதுனு சொல்ல continuous பிரிவ எடுத்துக்குறோம்.

Continuousன்னா, நடந்துட்டே இருக்கறது.

அப்போ, நிகழ்காலத்துல நடந்துட்டே இருக்க செயல், Present Continuous. 

அடுத்த postல இருந்து, ஒவ்வொரு tenseஐயும், தனித்தனியா பார்ப்போம்.

Wednesday 3 March 2021

மொழி அறிவோம் - 11

Living in a bubble.

இத அப்படியே translate பண்ணுனா, குமிழியில் வாழ்தல்னு வருமில்லயா? நிஜமான அர்த்தமும் அது தான். காலம் அல்லது சூழ்நிலை அல்லது வேற ஏதாவது ஒன்னு நம்மள சுத்தி மாறிட்டே இருக்கும். நாமளும் அதுக்கேத்த மாதிரி நம்மள பொருத்திகிட்டு, மாறிட்டு இருப்போம்.

அப்படி மாறும்போது நடக்குற புது விஷயங்களுக்கு ஏத்தா மாதிரி, புது ஐடியாக்கள், புது முடிவுகள் எல்லாம் தேவைப்படும் தானே? ஆனா அத ஏத்துக்க முடியாம சிலர் இருப்பாங்க.

அவங்கள குறிப்பிடும்போது தான் 'living in a bubble" அப்படினு சொல்லுவோம்.

எ.டு:
* Are you living in a bubble?
* She lives in a bubble
* "He has no idea what people are thinking because he lives in a bubble", said Mark

கணக்கு ரொம்ப ஈசி - 1

Euler's formula

ஒரு 3D படம் வரைந்து கொள்ளுங்கள். அல்லது ஒரு சதுர டப்பா எடுத்து வச்சுக்கோங்க. படத்தில் உள்ளது மாதிரி. 


நிஜமா அதுல எத்தனை மூலைகள் இருக்கோ, அது எவ்வளவுனு நோட் பண்ணலாம். இந்த படத்துல அப்படிப்பட்ட புள்ளிகள் 8.

எத்தனை வெற்றிடம் இருக்கு? நாலா பக்கமும் 4, அப்புறம் மேல கீழனு 2. மொத்தம் 6 

எத்தனை கோடுகள் இருக்கு? படத்துல எண்ணுனா ஈசியா எண்ணிடலாம். 12 இருக்கு.

இப்போ புள்ளிகள் + வெற்றிடம் - கோடுனு போடலாமா?

8+6-12 = 2

இது முப்பரிமாண வடிவங்களுக்கான விடை. இதே சாதாரண படத்துக்கு வரைஞ்சா? பதில் 1 வரும். 

Thursday 18 February 2021

ZZ செடி முளைச்சிடுச்சு

சில மாதங்களுக்கு முன்னாடி zz plantடோட ஒரு கிளைய, லவ் பேர்ட்ஸ் விளையாடும்போது ஒடைச்சு விட்ருச்சு. அத எடுத்து தனியா நட்டு வச்சிருந்தேன்.

என்னடா இது ரொம்ப மாசமா ஒரு மாற்றமும் இல்லயே. சின்ன தொட்டிக்கு மாத்திடுவோம்னு இன்னிக்கு எடுத்தா, கீழ அதோட கிழங்கு முளைச்சிருக்கு 😍😍

பாக்கவே அவ்ளோ சந்தோஷம். லவ் பேர்ட்ஸ் முட்டை பொரிக்கும்போதும் இப்படித் தான் இருக்கும். மனசெல்லாம் ஜில்லுனு, ஒரு மாதிரி சந்தோஷமா, வாவ்னு..

Gardening எல்லாருக்கும் எப்படினு தெர்ல. ஆனா எனக்கு பேரானந்தம். ஒவ்வொரு இலை முளைக்கும்போதும் இப்படி சந்தோஷம் வரும். ஒவ்வொரு செடியும் எனக்கு ஒரு source of happiness 

Monday 9 November 2020

சின்ன பொம்மைகளும் சின்னஞ்சிறு குழந்தைகளும்!

 


பொதுவாக விளையாடுவது என்றாலே மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு விளையாட்டிலும் நன்மை தீமைகள் உண்டு. சண்டை அதிகமிருக்கும் வீடியோ கேம்கள் குழந்தைகளிடம் வன்முறை எண்ணத்தை வளர்க்கிறது போன்ற செய்திகளை கடந்து வந்திருப்போம். சிறிய அளவுள்ள பொம்மைகளை வைத்து விளையாடுவதில் நன்மை உண்டா, இல்லை ஏதேனும் தீமைகள் உண்டா? பார்ப்போம்.


சிறிய பொம்மைகளுடன் விளையாடுவது குழந்தைகளின் மோட்டார் திறன்களைக் கூர்மைப்படுத்தும்.  இசைக்கருவிகள் வாசித்தல், எழுதுதல் போன்ற வேலைகளை செய்யும் போது பயன்படுத்தும் அதே திறன் தான். 


அவர்கள் தங்களை பாதிக்கும் விஷயங்களை இம்மாதிரி விளையாடுவதின் மூலம் பல சமயங்களில் சரி செய்து கொள்கிறார்கள். (healing)


அந்த பொம்மைகளை வைத்து பல விதமான விளையாட்டுகள் விளையாடுவார்கள் இல்லையா? அந்த விளையாட்டு அவர்களின் கற்பனைத் திறனை  வளர்க்கிறது.


அது மட்டுமன்றி, தன்னைவிட சிறிய பொம்மைகளை வைத்து விளையாடும் போது, தங்களை பெரிய ஆட்களாக நினைத்துக் கொள்கிறார்கள் குழந்தைகள். அது அவர்களின் personality வலிமையாகவும் உதவுகிறதாம்.


சரி, சீக்கிரம் சின்னச் சின்ன பொம்மைகள் வைத்து விளையாடுவோமா?


❤️

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...