Thursday 26 August 2021

மொழி அறிவோம் - 12

Tenses - காலம்

ஒரு விஷயம் எப்போ நடந்தது அப்படினு, அத பத்தி பேசற வாக்கியத்துல இருக்க காலத்த வச்சு தான் புரிஞ்சுப்போம்.

காலம் 3 வகையானது. அதாவது 3 tenses இருக்கு.

1. Present Tense (நிகழ் காலம்)
2. Past Tense (கடந்த காலம்)
3. Future Tense (எதிர் காலம்)

ஒவ்வொரு tenseலயும் 4 பிரிவு இருக்கு. 

1. Simple
2. Continuous
3. Perfect
4. Perfect Continuous

அதாவது ஒரு செயல், குறிப்பிட்ட காலத்துலயும், exactஆ எப்ப நடந்ததுனு புரிஞ்சுக்க உதவும்.

எடுத்துக்காட்டா, 
Present Continuous எடுத்துப்போம்.

Presentன்னா நிகழ்காலத்துல நடக்கறது. அத இன்னும் குறிப்பா எப்போ நடக்குதுனு சொல்ல continuous பிரிவ எடுத்துக்குறோம்.

Continuousன்னா, நடந்துட்டே இருக்கறது.

அப்போ, நிகழ்காலத்துல நடந்துட்டே இருக்க செயல், Present Continuous. 

அடுத்த postல இருந்து, ஒவ்வொரு tenseஐயும், தனித்தனியா பார்ப்போம்.

No comments:

Post a Comment

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...