இப்ப தொடங்குனது நிஜமான ஆட்டம். எல்லாருக்கும் குழப்பம் வந்துட்டா சும்மா இருப்பாங்களா? நம்மளையும் சேர்த்து குழப்பறது தானே, நம்மாட்களோட தனி சிறப்பே!
பெற்றவர்களைத் தவிர ஆளாளுக்கு அட்வைஸ்கள், கருத்துகள்னு காது கரிதுணி கிடைச்சா கூட அடைச்சுகற அளவுக்கு ஆக்கி விட்டாங்க.
ஏன்னா, அவங்களுக்கு மனோ புதுசு, எதுவும் தெரியாது. ஆனா பழகின எனக்கு கொஞ்சமாவது தெரியுமில்லையா? அதுவும் மனோ ஒவ்வொரு விஷயத்துக்கும் காட்ற பொறுமையும், யோசிச்சு செய்யற நிதானப்போக்கும் இன்னும் நம்பிக்கைய தான் கூட்டுனுச்சு.
நேர்லயே அதிகம் சந்திக்காத, பெரும்பாலும் பேஸ்புக்ல மட்டுமே தெரிஞ்சுகிட்ட எனக்கு எப்படி அப்படிபட்ட நம்பிக்கை வந்தது?
இவங்க போஸ்ட், கமென்ட்னு முதல்ல ஒரு கலகலப்பு இருந்தாலும், மொதல்ல உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செஞ்சது. பெண்கள்ன்னு எங்கயாவது போட்டுட்டாலே, களமாடறாப்லயே, அவ்வளவு பெரிய ஆணாதிக்கவாதியானு 😂
ஆனா பழக பழக, நிஜமான இந்த ஆள் சுட்டெடுத்த பெண்ணியவாதி டோய்னு புரிஞ்சு போச்சு. எங்க வீட்ட பொறுத்த வரையில யாரும் யாரோட சுதந்திரத்துலயும் தலையிட மாட்டாங்க. தேவைப்படும் போது suggestions மட்டுமே கிடைக்கும்.
அதுனால என்னோட சுதந்திரம்னு நான் நினைக்கற விஷயங்கள்ல யாராவது இம்மியளவு தலைய நீட்டுனாலும் அவங்கள என்னோட மனசுல இருந்து விரட்டிருவேன். (மனசுல இருந்தா தானே இவங்க இப்படி சொல்லிட்டாங்களேனு வருத்தம் வரும்).
இன்னிக்கு வரைக்கும் மனோ அப்படி ஒரு சுதந்திர அத்துமீறல செஞ்சதே இல்ல. எனக்கு பிடிச்ச விஷயங்கள செய்றேன். பிடிச்ச மாதிரி இருக்கேன்.
இன்னும் சொல்லனும்னா, தாலி போடறது, குங்கும்ம் வைக்கறதுனு சமுதாயம் கட்டாயப்படுத்தும் விஷயங்கள் கூட, என் சார்ந்த விஷயமா இருக்கறதால, போடலாமா வேணாமா, எங்க போடலாம் வேணாம்னு முடிவு பண்ற சுதந்திரம் என்கிட்டயே தான் இருக்கு.
இப்படி இதுக்கு முன்னாடியும் என் சம்மந்தப்பட்ட விஷயங்களின் முடிவு என்கிட்டயேவும், இருவர் சம்மந்தப்பட்ட விஷயங்கள் ஆலோசித்தும் தான் எடுக்கறோம்னா, அது கண்டிப்பா என் அம்மா வீட்ட தக்க வச்சுக்கற மாதிரியே தான? இந்த மனுஷன எப்படி நம்பாம இருக்க முடியும்?
அடுத்த நடந்தத அடுத்ததுல சொல்றேன் :)
*தொடரும்*
No comments:
Post a Comment