Saturday 13 May 2017

ஊழிக்காலம்


ஊழிக்காலம் வரட்டும்..
அந்த ஆற்றோரம் தோள் சாய்ந்தமர்ந்து
பொங்கி வரும் கோப அலைகளை பார்க்கலாம்..
முகத்தில் அறையும் நீர் ஜ்வாலைகளை கைகளில் தாங்கி இறுதியாய் ஒரு முறை ரசித்துக்கொள்ளலாம்..
ஆற்றின் ஆழத்தில் ரகசியமாய் சுழலும் நெருப்பை நாம் மட்டும் கண்டு வியக்கலாம்..
பூமியின் கடைசி சில மணித்துளிகளை வீணாக்காமல் காதல் செய்யலாம்..
பின் பிரியும் இவ்வுடல் விடுத்து, அழிவில்லா பிரபஞ்ச துளிகளாய் காதல் தொடங்கலாம்..
அப்போது அழிந்து கிடக்கும் பூமியை, சுற்றுலா பயணி போல் சுற்றி பார்த்து, அழித்த விதத்தை கதையாய் பேசி ஆற்றாமையுடன் காதல் செய்யலாம், ஒருவரை ஒருவர்..

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...