Thursday 30 March 2017

பட்டாம்பூச்சி


கருப்பு
வெள்ளை சிறகுகள் கொண்டு பெண் பட்டாம்பூச்சி ஒருத்தி பிறந்தாள்..
வண்ணங்கள்
பூசும் ஆசை கொண்டு பறந்து
பார்க்க துணிந்தாள்...
"அம்மா,
இக்கடும் மழையும் பாதுகாப்பற்றது பார்க்காதே"
என பச்சை வண்ணத்தை தூக்கி
எறிந்தது, அப்பா பட்டாம்பூச்சி
"பெண்
பிள்ளை என்பது வயிற்றில் நெருப்பு
என்பது சரியாய் தான் இருக்கிறது.
பேசாம கூட்டுக்குள்ள இருஎன்று சொல்லி ஆரஞ்சு
வண்ணம் தூக்கி எறிந்தது அம்மா
பட்டாம்பூச்சி.
மேலும்
சில வண்ணமற்ற பட்டாம்பூச்சிகளை நட்பாய் கொண்டு,
பல வண்ணம் பூசி விளையாடி
கொண்டிருக்கும் ஆண் பட்டாம்பூச்சிகளை ஏக்க
கண்களுடன் பார்த்து கொண்டிருந்தது.
பெண் விடுதலை, பெண்ணியம் என பேசித்திரிந்த சிலரும்
வண்ணமில்லா சில பட்டாம்பூச்சிகளை கூட்டுக்குள்
வைத்து கொண்டு, வண்ணங்களில் அவளுக்கு விருப்பமிருப்பதில்லை என வார்த்தை ஜாலம் காட்டி
கொண்டிருந்தனர்
காலம் மாற மாற
காடு பார்க்கும் ஆசை அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே சென்று வண்ணங்கள் பார்த்து
ரசிக்க துவங்கின அவ்வழகிய பட்டாம்பூச்சிகள்…
குரூர மனம் கொண்ட
குளவிகளும், பல்லிகளுமோ
நிர்பயாக்களுக்கும்
ஸ்வாதிகளுக்கும்,
அடர் சிவப்பில்
ரத்தவண்ணம் பூசிச்சென்றன
அப்போது தான் வானத்தையே
பாத்து நீல வானம் அறிய துவங்கியிருந்த சின்ன பட்டாம்பூச்சிகளையும், மாமிச பிண்டங்களை
மட்டும் பார்த்து,
ஹாசினிகளுக்கும்,
ரித்திக்காகளுக்கும் அதே அடர் சிவப்பு வண்ணம் கொடுத்தன…
ஆனாலும், நம்பிக்கை
இழக்கா பட்டாம்பூச்சிகள் சில இன்னமும் காத்திருக்கின்றன
இரையாய் அல்ல,
இணையாய் கொண்டாடும் பட்டாம்பூச்சி தோட்டம் நிச்சயம் வாய்க்குமென்று 

Friday 3 March 2017

மழை!!!


ஜன்னல் திறக்கவியலாதபடி அடை மழை இங்கு..
காய்ச்சலாயிற்றே என்று போர்வைக்குள் பதுங்கி இருக்கையில்,
ஏதோ ஒரு வழி கண்டுபிடித்து
ஒளிந்திருந்த என்னை காதலிக்க வந்தது குளிர்காற்று...
அறையெங்கும் சில்லென்று இருக்க,
மயக்க வந்தது கண்ணாடி வழி மின்னல்..
மின்னலோ சூரியன் விழுங்கிய கத்திரி பூவின் வண்ணமாய் வீச,
இடியின் தாளம் இசை கேட்க தூண்டியது..
மயங்கி மயங்கி ஆடினேன்..
விழுந்து புரண்டும் மழையையே தேடினேன்...
என் செடிகளை எல்லாம் முத்தமிட்டு சென்ற அந்த துளிகளை எல்லாம் பருகிவிட முடிவு செய்து நானும் முத்தமிட்டேன்..
வழிந்து சென்ற துளிகளை எல்லாம் வாரி அணைத்து கொள்ள தரை தொட்டு தேடினேன்..
குளிர் மறந்து மெல்லிசையில் நடனமாடினேன்...
கொஞ்சமாய் நேரம் போன பின் உணர்வு தீண்ட,
குளிர் தாண்டிய உடல் வெப்பம் எச்சரித்து சென்றது...
ஐயோ காய்ச்சல் அல்லவா...
மீண்டும் போர்வைக்குள்ளேயே பதுங்கிக்கொண்டேன்..
தேடிச்சென்ற துளிகளையெல்லாம் விரலிடுக்கில் ஒளித்து கொண்டு

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...