Friday 3 March 2017

மழை!!!


ஜன்னல் திறக்கவியலாதபடி அடை மழை இங்கு..
காய்ச்சலாயிற்றே என்று போர்வைக்குள் பதுங்கி இருக்கையில்,
ஏதோ ஒரு வழி கண்டுபிடித்து
ஒளிந்திருந்த என்னை காதலிக்க வந்தது குளிர்காற்று...
அறையெங்கும் சில்லென்று இருக்க,
மயக்க வந்தது கண்ணாடி வழி மின்னல்..
மின்னலோ சூரியன் விழுங்கிய கத்திரி பூவின் வண்ணமாய் வீச,
இடியின் தாளம் இசை கேட்க தூண்டியது..
மயங்கி மயங்கி ஆடினேன்..
விழுந்து புரண்டும் மழையையே தேடினேன்...
என் செடிகளை எல்லாம் முத்தமிட்டு சென்ற அந்த துளிகளை எல்லாம் பருகிவிட முடிவு செய்து நானும் முத்தமிட்டேன்..
வழிந்து சென்ற துளிகளை எல்லாம் வாரி அணைத்து கொள்ள தரை தொட்டு தேடினேன்..
குளிர் மறந்து மெல்லிசையில் நடனமாடினேன்...
கொஞ்சமாய் நேரம் போன பின் உணர்வு தீண்ட,
குளிர் தாண்டிய உடல் வெப்பம் எச்சரித்து சென்றது...
ஐயோ காய்ச்சல் அல்லவா...
மீண்டும் போர்வைக்குள்ளேயே பதுங்கிக்கொண்டேன்..
தேடிச்சென்ற துளிகளையெல்லாம் விரலிடுக்கில் ஒளித்து கொண்டு

No comments:

Post a Comment

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...