Thursday, 24 September 2020

மொழி அறிவோம் - 10

 Slippery slope


வழுக்குற மாதிரி இருக்கக்கூடிய சரிவான பகுதி


இத எப்படி ஒரு sentenceல பயன்படுத்துவோம்னு பாக்கறதுக்கு முன்னாடி, அப்படி ஒரு வழுக்கு சரிவுல நின்னா என்னாகும்னு யோசிச்சு பாருங்க.


வழுக்கிட்டு கீழ வரைக்கும் போயி இடுப்பொடிச்சுட்டு உட்கார்ந்துட்டு இருப்போம்ல. இதே அர்த்தத்துல தான் sentenceலயும் பயன்படுத்துவோம்.


ஆரம்பத்துல தப்பு பண்ணுட்டா, கடைசி வரைக்கும் அவ்ளோதான் அப்படினு சொல்லும்போதும்,


யாராவது வந்து காப்பத்தலான நம்ம கதி அதோகதிதான்னு சொல்ற இடங்கள்லயும், slippery slope பயன்படுத்தலாம்.


Eg: His behavior will lead him down a slippery slope to ruin


அவனோட இந்த பழக்கம் அவன உருப்படி இல்லாத இடத்துல தான் கொண்டு நிறுத்தப்போகுது.


Having a glass of wine at morning is a slippery slope - you'll end up finishing the whole bottle by the end of the evening.


காலையில ஒரு க்ளாஸ் வைன் குடிக்கலாம்னு ஆரம்பிச்சினா, சாயங்காலத்துக்குள்ள முழு பாட்டிலயும் முடிச்சிருவ. 


எவனாலயும் காப்பாத்த முடியாது, கம்முனு கெடனு சொல்றாங்க.


Tuesday, 22 September 2020

மொழி அறிவோம் - 9

உச்சரிப்பு 


தனித்தனியா ஒரு வார்த்தைய உச்சரிக்கும்போது ஒரு மாதிரியும், 2 வார்த்தைகள சேர்த்து உச்சரிக்கும் போதும் வேற மாதிரி இருக்க வார்த்தையவும் பார்ப்போம். முதலில், தமிழ் எடுத்துக்காட்டு, பிறகு ஆங்கிலம்.

தமிழ்ல அந்த மாதிரி இருக்க வார்த்தைகள் 

வெண்மை + பட்டு = வெண்பட்டு.

இது மையீற்று பண்புப் பெயர் புணர்ச்சி.

அதாவது, பண்பைச் சொல்லக்கூடிய, 'மை' என்ற எழுத்தில் முடியக்கூடிய வார்த்தை. அந்த வார்த்தை, அடுத்து வர வார்த்தையோட சேரும் போது, மை காணாம போயிடுது. 

செம்மை + மலர் = செம்மலர்.

இந்த மாதிரி ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை 'd'யில் முடிந்து, அடுத்த வார்த்தை 'g'யில் தொடங்கினால், dயின் உச்சரிப்பு காணாம போயிடும்.

எ.டு: bad, girl. 

இதை சேர்த்து உச்சரிக்கும்போது, ba-girl என்பது போல் உச்சரிப்போம்.

பி.கு: பெரும்பாலும் பண்புகள் 'மை' அப்படினு தான் முடியும்.

பண்பு அப்படின்னா தன்மைனு அர்த்தம். குளிர் அடிக்குதுனா குளுமை அதோட பண்பு. வெயில் அடிக்குது சுடுதுனா, வெம்மை அதோட பண்பு.



Friday, 18 September 2020

மொழி அறிவோம் - 8

 

The" எங்கல்லாம் பயன்படுத்தலாம்?


Lakes, mountains, cities, islands & continents பெயர்களுக்கு முன்னாடில்லாம் the சொல்லக்கூடாது.


எ.டு: I want to climb Mount Everest.


பெரும்பாலான நாடுகள் பெயர் முன்னாடி the சொல்ல மாட்டோம்.


எ.டு: I went to India last year.


சில நாடுகள் பெயர் முன்னாடி the சொல்லுவோம். ஆனா அதுக்கு அந்த நாட்டோட பெயர், plural nounஆ இருக்கனும். அதாவது பன்மை பெயர்ச்சொல்


எ.டு: I went to the Netherlands.


States, kingdom or republic போன்ற வார்த்தைகள் நாட்டோட பெயர்ல இருந்தா the சொல்லலாம்.


எ.டு: I live in the United Kingdom.


ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்லும் போது பயன்படுத்தலாம். குறிப்பிட்ட மனுசன், குறிப்பிட்ட விஷயம், அந்த மாதிரி. Use "the" when the noun is specific or particular


Let's read the book அப்படினு சொன்னா ஏதோ ஒரு குறிப்பிட்ட புத்தகத்த சொல்றாங்க.


Let's read a book ஏதோ ஒரு புத்தகத்த படிப்போம்னு சொல்றாங்க.


ஒருமை, பன்மைனு இரண்டு விதமான வார்த்தைகள் முன்னாடியும் the பயன்படுத்தலாம்.


Wednesday, 16 September 2020

மொழி அறிவோம் - 7

Sticking point

Meaning: an obstacle to progress towards an agreement or goal

நாம ஒரே சமாதானத்துக்கு வர முயற்சி பண்ணிட்டு இருக்கும்போது, இரண்டு பக்கத்தாரும் இறங்கி வர விரும்பாத ஒரு விஷயம் இருக்குமே, அது தான் sticking point.

அதாவது, அந்த sticking pointல தான்  முட்டல் மோதலே நடக்கும்.

எடுத்துக்காட்டு:

கணவனும் மனைவியும் சேர்ந்து அந்த மாதத்தின் பட்ஜெட் போடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கணவன் புது மொபைல் வாங்க திட்டமிட்டு பட்ஜெட்டில் மற்ற செலவுகளை குறைத்து, போனை வாங்க திட்டமிடுகிறார்.

பழைய போன் நன்றாக இருக்கும்போது புது போன் அநாவசியம் என்ற கருத்தில் மனைவியும், வேலை செய்வதற்கு இந்த போனின் features வசதியாக இல்லை என்ற கருத்தில் கணவனும் விடாபிடியாக நின்றுவிட்டனர்.

இப்போது போன் வாங்குவதற்கு ஆகும் செலவு இங்கு sticking point.

Example: 

John and Mary could not agree on the budget. The amount to be spent on mobile was a real sticking point

ஜானுக்கு மேரிக்கும் பட்ஜெட்ல உடன்பாடே வரல. மொபைல் வாங்க ஆகப்போற செலவு தான் அங்க பிரச்சனையா இருந்ததுனு அர்த்தம்.



Thursday, 10 September 2020

மொழி அறிவோம் - 6

Vanilla அப்படின்னா என்ன?


நிறைய பேருக்கு அத ஒரு ஐஸ்க்ரீம் flavourஆ மட்டும் தான் தெரியும். Vanillaங்கற வார்த்தை nounஆ பயன்படுத்தும் போது அது ஐஸ்க்ரீம்.


ஆனா vanillaங்கற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு.


அடிப்படையான, சாதாரணமான அப்படினு. இது adjectiveஆ பயன்படும்போது. 


characterless, faceless, featureless, indistinctive, neutral இந்த வார்த்தைகள் எல்லாமே அதோட synonyms. அதாவது அதே பொருள் தரக்கூடிய சொற்கள்.


இத எப்படி sentenceல பயன்படுத்தறது?


The decoration is pretty vanilla


அலங்காரம் சாதாரணமாத் தான் இருக்குனு சொல்றாங்க.


பி.கு:


Noun(பெயர்ச்சொல்): பொருள், கருத்து, இடம் அல்லது ஆள் பெயராகப் பயன்படுத்தப்படும் சொல்


Adjective(உரிச்சொல்): பெயர்ச்சொல்லைப் பற்றி விவரிக்கக் கூடிய சொல்


Wednesday, 26 August 2020

மொழி அறிவோம் - 5

Some/Any தொடர்ச்சி..


நேற்று சொன்ன அதே rules தான் some/any பயன்பாட்டிற்கு. இன்னும் சில பயன்பாடுகள் பார்க்கலாம்.


Something என்ற வார்த்தையை ஏதேனும் பொருள் சம்மந்தமான இடத்தில் பயன்படுத்தலாம்.


எ.டு: Look, I've got something for you!


Somebody /Someone என்ற வார்த்தையை மனிதர்கள் சம்மந்தப்பட்ட இடத்தில் பயன்படுத்தலாம்.

Somebody கொஞ்சம் informal, அதாவது casualஆ பேசும் போது பயன்படுத்தலாம். Someoneங்கறது formal. பொதுவாக எழுதும்போது அதிகம் someone பயன்படுத்துவாங்க.

எ.டு: 

1.There's somebody at the door.

2.I know someone who could help us.


Somewhere என்ற வார்த்தையை இடங்கள் பற்றி குறிப்பிடும்போதும் பயன்படுத்தலாம்.


Somewhere பயன்படுத்தும்போது ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கனும். அது என்னன்னா, somewhereங்கற வார்த்தைக்கு முன்னாடி in,to,for இந்த மாதிரி எந்த prepositionsம் பயன்படுத்தக் கூடாது. 


எ.டு: He lives somewhere near here


இதே தான், anything, anybody, anyone, anywhereக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி anyங்கற வார்த்தைய negative அல்லது கேள்வி பயன்படுத்தும் இடத்துல தான் use பண்ணனும்..


Addtl tips:


ஒருத்தர சொல்லும் போது, SOMEBODY or SOMEONE, நிறைய பேர சொல்லனும்னா some people


அதே மாதிரி SOMETHINGக்கு பன்மை some things


SOMEWHEREக்கு பன்மை some places

Tuesday, 25 August 2020

மொழி அறிவோம் - 4

Some, anyங்கற வார்த்தைகள எப்படி பயன்படுத்தறதுனு பார்ப்போம்.


Some, any இரண்டுமே அளவைக் குறிப்பிட சொல்ல பயன்படற வார்த்தைகள். அதாவது எவ்வளவு இருக்குனு சொல்ல.


சிம்பிளா சொல்லனுனா,

பாசிட்டிவா சொல்லும் போது someம், கேள்விக்கு பதில் சொல்லும் போதும், நெகடிவா சொல்லும் போதும் anyம் பயன்படுத்துறோம்.


எ.டு:  I have some food if you are hungry.

இது பாசிட்டிவான பேச்சு. பசிச்சா என்கிட்ட இருக்க சாப்பாட்ட சாப்பிடுனு சொல்றாங்க. அதுனால some பயன்படுத்துறோம்.

There aren't any of the chairs left for me to sit.

நான் உட்கார ஒரு சேர் கூட காலியா இல்லனு சொல்றாங்க. இல்லங்கறது நெகடிவ் தானே. அங்க any. 


ஆனா any பயன்பாட்டுல ஒரு சின்ன exception இருக்கு. அது என்னன்னா, கேள்விக்கு பதில் சொல்லும்போது any பயன்படுத்தாலாம்னு சொன்னேன் இல்லியா? அந்த கேள்வி ஒரு உதவி பண்றத பத்தியோ அதாவது offering அல்லது requestஆவோ இருந்தா, அப்போ some தான் பயன்படுத்துவோம்.

எ.டு: Could you make me some food?

எனக்கு கொஞ்சம் சாப்பாடு செஞ்சு தரியா? இது கேள்வி தான். ஆனா இங்க any பயன்படுத்தக் கூடாது. ஏன்னா செய்து தரியாங்கறது request.


Will you need any money?

இதுவும் கேள்வி. ஆனா இதுல requestம் இல்ல, அவங்க எடுத்துக்கிறியானு offerம் பண்ணல. காசு தேவைப்படுமானு கேக்கறாங்க. அதுனால any பயன்படுத்துறோம்.


Additional tips:

Some அல்லது anyய தொடர்ந்து a / an / the / my / your / his / her  போன்ற வார்த்தைகள் வரும்போது, some of / any of னு சொல்லனும்.

எ.டு: some of "your" books

Any of "the" writers

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...