Wednesday, 3 March 2021
மொழி அறிவோம் - 11
கணக்கு ரொம்ப ஈசி - 1
Thursday, 18 February 2021
ZZ செடி முளைச்சிடுச்சு
Monday, 9 November 2020
சின்ன பொம்மைகளும் சின்னஞ்சிறு குழந்தைகளும்!
பொதுவாக விளையாடுவது என்றாலே மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு விளையாட்டிலும் நன்மை தீமைகள் உண்டு. சண்டை அதிகமிருக்கும் வீடியோ கேம்கள் குழந்தைகளிடம் வன்முறை எண்ணத்தை வளர்க்கிறது போன்ற செய்திகளை கடந்து வந்திருப்போம். சிறிய அளவுள்ள பொம்மைகளை வைத்து விளையாடுவதில் நன்மை உண்டா, இல்லை ஏதேனும் தீமைகள் உண்டா? பார்ப்போம்.
சிறிய பொம்மைகளுடன் விளையாடுவது குழந்தைகளின் மோட்டார் திறன்களைக் கூர்மைப்படுத்தும். இசைக்கருவிகள் வாசித்தல், எழுதுதல் போன்ற வேலைகளை செய்யும் போது பயன்படுத்தும் அதே திறன் தான்.
அவர்கள் தங்களை பாதிக்கும் விஷயங்களை இம்மாதிரி விளையாடுவதின் மூலம் பல சமயங்களில் சரி செய்து கொள்கிறார்கள். (healing)
அந்த பொம்மைகளை வைத்து பல விதமான விளையாட்டுகள் விளையாடுவார்கள் இல்லையா? அந்த விளையாட்டு அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கிறது.
அது மட்டுமன்றி, தன்னைவிட சிறிய பொம்மைகளை வைத்து விளையாடும் போது, தங்களை பெரிய ஆட்களாக நினைத்துக் கொள்கிறார்கள் குழந்தைகள். அது அவர்களின் personality வலிமையாகவும் உதவுகிறதாம்.
சரி, சீக்கிரம் சின்னச் சின்ன பொம்மைகள் வைத்து விளையாடுவோமா?
❤️
Wednesday, 4 November 2020
விளையாட்டாய் குழந்தை வளர்க்கலாம்!
விளையாட்டாய் குழந்தை வளர்க்கலாம்!
- Sowmya Red
சிறுவன் ஒருவனுக்கு பள்ளி என்றாலே கொஞ்சம் பதட்டம் இருப்பதை அவனது தாய் கவனிக்கிறார். அவனிடம் அதைப் பற்றி தொடர்ந்து பேசியும் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு நாள் தன்னிடம் இருக்கும் பொம்மைகளை மணலில் போட்டு அச்சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். பொம்மைகளைக் கொண்டு சிறிய வகுப்பறையை அமைக்கிறான். வரிசையாய் விலங்கு பொம்மைகளை வைத்த அவன், ஒரு சிறிய நாய் பொம்மையை முக்கியமான இடத்தில் வைக்கிறான். சிறப்பு கவனமாம்! விளையாட்டை பற்றி அவன் தாய்க்கு விளக்குகிறான்
சிறுவன்: அம்மா அவங்க எல்லாரும் ஸ்டூடண்ட்ஸ். இந்த நாய் குட்டி ஸ்டூடண்ட் இருக்கில்ல, அது அதோட அம்மா கிட்ட இருந்து தூரமா வந்து ஸ்கூல்ல இருக்கு. அதான் அது பயபட்டுட்டு இருக்கு. அதுனால அதுக்கு ஸ்பெஷல் இடம்.
அம்மா: ஓ அப்படியா. அம்மா எப்பவும் கூடவே இருக்க முடியாதுல்ல.
சிறுவன்: ஆமாம்மா ஆனா நாய் குட்டிக்கு அம்மா பக்கத்துல இல்லனா பயம் வந்துடும்.
தாய் உடனே நாய்க்கு பக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ பொம்மையை வைக்கிறார்.
அம்மா: இந்த சூப்பர் ஹீரோ அந்த நாய் குட்டி கூட இருக்காருல்ல. அதுனால அம்மா பக்கத்துல இல்லனாலும் நாய்குட்டி பயப்பட தேவையில்ல.
அன்றிலிருந்து, திரும்பத் திரும்ப நாய்க் குட்டி பொம்மையும், சூப்பர் ஹீரோ பொம்மையும் சேர்த்து வைத்து தொடர்ந்து விளையாடுகின்றனர். ஒரு மாதத்தில், அந்த சிறுவனின் பள்ளி குறித்த பயம் பல மடங்கு குறைந்து, அவன் செயல்பாடுகளில் முன்னேற்றங்கள் தெரிந்தது.
விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. கதைகள் எப்படி பல விஷயங்களை புரிய வைக்கின்றதோ, அதே போல விளையாட்டையும் ஒரு தளமாய் பயன்படுத்த முடியும்.
மலைகள் எனக்கு விருப்பம்!
உயரம் எனக்கு பிடிக்கும்
அதிலும் மலைகள் என்றால் பெரு விருப்பம்!
எந்த மலை மீது ஏறி நின்றாலும், உடனே ஒரு மகாராணி போன்ற உணர்வு வந்துவிடும்.
சொந்த ஊரில் இருக்கும்போது, ஏற்காடு மலை செல்வதுண்டு.
மேலே ஏறி நின்று, என்னை நானே அரசியாக எண்ணிக்கொண்டு பல கட்டளைகள் இட்டிருக்கிறேன். சிரிப்பாக இருந்தாலும் ஓர் அரசியைப் போன்ற உணர்வை மலைகள் தருவது என்னளவில் நிஜமே!
எப்போதும் மலை அரசிகள் எனக்குத் துணையாக இருக்கின்றனர்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறார்கள். மலைகள் நகர்வதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதுவல்ல நிஜம்!
மலைகள் மனத்துக்குள் நகர்கின்றன.
எந்தவொரு சாதாரணத்தையும் அசாதாரணமாக மாற்றி விடுவதில் மலைகளுக்கு நிகர் மலைகளே!
என்னை அரசியாக மாற்றுவதாலேயே, மலைகள் என்றால் பெரு விருப்பம் எனக்கு!
❤
Tuesday, 3 November 2020
எதிர்மறை எண்ணங்களும் - சிறுவர் விளையாட்டுகளும்!
எதிர்மறை எண்ணங்களும் - சிறுவர் விளையாட்டுகளும்! - Sowmya Red
Melissa என்பவருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. படிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தது மெலிசாவின் குழந்தை. திடீரென தவறி விழுந்து உருண்டு கீழே விழுந்து விட, பயத்தில் கத்தி அழுகிறது. அவளது தாயான மெலிசாவும் பயத்தில் கத்தி அழத் தொடங்குகிறார். உடனே அப்பா வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு, ஹாலுக்கு ஓடுகின்றார். சமாதானப்படுத்திவிட்டு எங்காவது அடிபட்டிருக்கிறதா என்று பார்க்கின்றார். குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. உதட்டில் லேசான வீக்கம் மட்டும். Hot packஐ உதட்டின் மேலே வைக்கிறார்கள்.
அதன் பிறகு குழந்தை வினோதமான ஒரு விளையாட்டில் ஈடுபடுகிறது. படிகளில் ஏறி நின்று பொம்மைகளை தூக்கி எறிந்து விளையாடுகிறது. தினமும் இதே விளையாட்டை விளையாடுகிறது. பொம்மைகளை எடுத்து அடுக்கி வைக்க நேர்ந்த அவளது தந்தை கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்கிறார். அப்போது அதைக் கவனிக்கிற தாயார் பொம்மைகளை எடுத்து அவளுக்கு செய்தது போல, காயமிருக்கிறதா என்று தேடுகிறார். அவள் அதை கவனிக்கிறாள். ஹாட் பேக் வைக்கலாமா என்று கேட்க, குழந்தை உடனே ஹாட் பேக்கை எடுத்து பொம்மையின் உதட்டின் மீது வைக்கிறது. இப்படியே ஒரு வாரம் விளையாடிய குழந்தை அதற்கடுத்த அந்த விளையாட்டை விளையாடவில்லை.
பொதுவாக நமக்கும் இது போன்று நம்மை பயமுறுத்தும் நிகழ்வுகள் நடக்கலாம். நாம் புலம்பி தீர்த்துக்கொள்ளவோம். சிலர் அதை மனதில் அழுத்தி traumaவாக மாற்றிக் கொள்கின்றனர்.
ஆனால் இங்கு, தனக்கு நேர்ந்த பயத்தை விளையாட்டின் மூலம் அந்த குழந்தை தீர்க்க முயன்று, வெற்றியும் பெற்றிருக்கிறது. தாய் சரியான நேரத்தில் கவனித்து ஒத்துழைத்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களில் இது மாதிரி healing taskகளை செய்யலாம்.
குழந்தையின் உலகத்தில் நுழைவதற்கு முதல் படியே அவர்களுடன் விளையாடுவதுதான். இத்தகைய விளையாட்டுகளின் மூலம் அவர்கள் மனதில் எந்த வகையான எதிர்மறை உணர்வும் தங்கி விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
❤
மொழி அறிவோம் - 14
Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...
-
மனதில் நின்றவர்கள் என்றால், ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, அக்கம்மாள் எனஎல்லாரும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் தான். எவ்வளவு நல்லவங...
-
Slippery slope வழுக்குற மாதிரி இருக்கக்கூடிய சரிவான பகுதி இத எப்படி ஒரு sentenceல பயன்படுத்துவோம்னு பாக்கறதுக்கு முன்னாடி, அப்படி ஒரு வழுக்...
-
Some, anyங்கற வார்த்தைகள எப்படி பயன்படுத்தறதுனு பார்ப்போம். Some, any இரண்டுமே அளவைக் குறிப்பிட சொல்ல பயன்படற வார்த்தைகள். அதாவது எவ்வளவு இர...


