விளையாட்டாய் குழந்தை வளர்க்கலாம்!
- Sowmya Red
சிறுவன் ஒருவனுக்கு பள்ளி என்றாலே கொஞ்சம் பதட்டம் இருப்பதை அவனது தாய் கவனிக்கிறார். அவனிடம் அதைப் பற்றி தொடர்ந்து பேசியும் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு நாள் தன்னிடம் இருக்கும் பொம்மைகளை மணலில் போட்டு அச்சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். பொம்மைகளைக் கொண்டு சிறிய வகுப்பறையை அமைக்கிறான். வரிசையாய் விலங்கு பொம்மைகளை வைத்த அவன், ஒரு சிறிய நாய் பொம்மையை முக்கியமான இடத்தில் வைக்கிறான். சிறப்பு கவனமாம்! விளையாட்டை பற்றி அவன் தாய்க்கு விளக்குகிறான்
சிறுவன்: அம்மா அவங்க எல்லாரும் ஸ்டூடண்ட்ஸ். இந்த நாய் குட்டி ஸ்டூடண்ட் இருக்கில்ல, அது அதோட அம்மா கிட்ட இருந்து தூரமா வந்து ஸ்கூல்ல இருக்கு. அதான் அது பயபட்டுட்டு இருக்கு. அதுனால அதுக்கு ஸ்பெஷல் இடம்.
அம்மா: ஓ அப்படியா. அம்மா எப்பவும் கூடவே இருக்க முடியாதுல்ல.
சிறுவன்: ஆமாம்மா ஆனா நாய் குட்டிக்கு அம்மா பக்கத்துல இல்லனா பயம் வந்துடும்.
தாய் உடனே நாய்க்கு பக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ பொம்மையை வைக்கிறார்.
அம்மா: இந்த சூப்பர் ஹீரோ அந்த நாய் குட்டி கூட இருக்காருல்ல. அதுனால அம்மா பக்கத்துல இல்லனாலும் நாய்குட்டி பயப்பட தேவையில்ல.
அன்றிலிருந்து, திரும்பத் திரும்ப நாய்க் குட்டி பொம்மையும், சூப்பர் ஹீரோ பொம்மையும் சேர்த்து வைத்து தொடர்ந்து விளையாடுகின்றனர். ஒரு மாதத்தில், அந்த சிறுவனின் பள்ளி குறித்த பயம் பல மடங்கு குறைந்து, அவன் செயல்பாடுகளில் முன்னேற்றங்கள் தெரிந்தது.
விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. கதைகள் எப்படி பல விஷயங்களை புரிய வைக்கின்றதோ, அதே போல விளையாட்டையும் ஒரு தளமாய் பயன்படுத்த முடியும்.
No comments:
Post a Comment