Tuesday, 25 August 2020

மொழி அறிவோம் - 4

Some, anyங்கற வார்த்தைகள எப்படி பயன்படுத்தறதுனு பார்ப்போம்.


Some, any இரண்டுமே அளவைக் குறிப்பிட சொல்ல பயன்படற வார்த்தைகள். அதாவது எவ்வளவு இருக்குனு சொல்ல.


சிம்பிளா சொல்லனுனா,

பாசிட்டிவா சொல்லும் போது someம், கேள்விக்கு பதில் சொல்லும் போதும், நெகடிவா சொல்லும் போதும் anyம் பயன்படுத்துறோம்.


எ.டு:  I have some food if you are hungry.

இது பாசிட்டிவான பேச்சு. பசிச்சா என்கிட்ட இருக்க சாப்பாட்ட சாப்பிடுனு சொல்றாங்க. அதுனால some பயன்படுத்துறோம்.

There aren't any of the chairs left for me to sit.

நான் உட்கார ஒரு சேர் கூட காலியா இல்லனு சொல்றாங்க. இல்லங்கறது நெகடிவ் தானே. அங்க any. 


ஆனா any பயன்பாட்டுல ஒரு சின்ன exception இருக்கு. அது என்னன்னா, கேள்விக்கு பதில் சொல்லும்போது any பயன்படுத்தாலாம்னு சொன்னேன் இல்லியா? அந்த கேள்வி ஒரு உதவி பண்றத பத்தியோ அதாவது offering அல்லது requestஆவோ இருந்தா, அப்போ some தான் பயன்படுத்துவோம்.

எ.டு: Could you make me some food?

எனக்கு கொஞ்சம் சாப்பாடு செஞ்சு தரியா? இது கேள்வி தான். ஆனா இங்க any பயன்படுத்தக் கூடாது. ஏன்னா செய்து தரியாங்கறது request.


Will you need any money?

இதுவும் கேள்வி. ஆனா இதுல requestம் இல்ல, அவங்க எடுத்துக்கிறியானு offerம் பண்ணல. காசு தேவைப்படுமானு கேக்கறாங்க. அதுனால any பயன்படுத்துறோம்.


Additional tips:

Some அல்லது anyய தொடர்ந்து a / an / the / my / your / his / her  போன்ற வார்த்தைகள் வரும்போது, some of / any of னு சொல்லனும்.

எ.டு: some of "your" books

Any of "the" writers

Monday, 24 August 2020

லவ் பேர்ட்ஸ் உணவுகள்

சமீபமா சில நண்பர்கள் லவ் பேர்ட்ஸ் வாங்கியிருக்காங்க, சிலர் இன்பாக்ஸ்ல கேட்டீங்க. உதவியா இருக்கும்னு இந்த போஸ்ட். நாங்க தர உணவுகள் லிஸ்ட் போடறேன்.


1) திணை (main food)

2) கேழ்வரகு

3) மற்ற சிறு தானியங்கள் கொஞ்சமா

4) சூரியகாந்தி விதை

5) எந்த கீரையா இருந்தாலும் அதோட தண்டு, புதினா, கொத்தமல்லி etc

6) பழங்கள்

7) காய்கள்

8) சுண்ணாம்புக் கல்

9) கணவாய் ஓடு

10) மாசத்துக்கு ஒரு தடவ சத்து டானிக். குடிக்கற தண்ணியில 1-2 drops

11) நிறைய கடிக்கும், அதுனால வேப்பம் குச்சி, முருங்கை கட்டை அந்த மாதிரி ஏதாவது உள்ள போட்டு விட்டா, சத்தா கடிச்சிட்டு இருப்பாங்க.


குத்துமதிப்பா சொல்லனும்னா கைக்கு கிடைக்கறத போடலாம், அது நல்லதா இருக்க பட்சத்தில் 👻


Happy parenting :)

மொழி அறிவோம் - 2

Next - The next - Nearest வித்தியாசம்


Next: 'அடுத்தது'னு அர்த்தம். இது பெரும்பாலும் நாள், வாரம், மாதம் அல்லது ஆண்டு என்ற பொருளுடன் பயன்படுது. 


எ.டு: I'll see you next week.


The next : 'அடுத்து வர்ற காலம்/நேரம்'னு குறிக்கும். அடுத்து சில நிமிடங்கள்னு சொல்வோமே, அந்த மாதிரி இடங்கள்ல. அதிகபட்சமாக ஒரு வாரம் அப்படினு சொல்றது வரைக்கும் the nextஐ பயன்படுத்தலாம்.


எ.டு: The next 5 minutes are going to be crucial.

The next week will be the most important part of your life.


Nearest: 'தூரத்துல இருக்கவங்களுக்கு அருகில்'. அதாவது ஒரு பெரிய டேபிள்ல நண்பர்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கும்போது, யாராவது ஒருத்தர, உங்க பக்கத்துல தான் உப்பு இருக்கு எடுத்து குடுங்கனு சொல்லும் போது nearestஐ பயன்படுத்தலாம். 


எ.டு: Pass me the salt. You are the nearest. 

This stop is the nearest to the airport.

மொழி அறிவோம் - 3

Dent vs dent-


"Dent" as  verb - பள்ளம்/குழி/ ஒடுக்கி விடறது மாதிரி.

எ.டு: He made a dent in my car.

காரை இடிக்கறதுனால ஒரு ஒடுக்கல் வரும்ல, அத சொல்றாங்க இங்க.

மொழி பெயர்க்கும் போது, காரை இடிச்சு சேதப்படுத்திட்டான்னு சொல்லலாம். 


இதையே குறைஞ்சிருச்சுங்கற அர்த்தத்துலயும் பயன்படுத்தலாம்.

எ.டு: Buying a new car put a big dent in our savings.


புதுக்கார் வாங்கனதுல எங்க சேமிப்பு பயங்கரமா அடி வாங்கிருச்சுனு சொல்றாங்க.


"dent-" as combining form. அதாவது அந்த வார்த்தைய வேற ஏதாவதோட சேர்த்து பயன்படுத்துறது.  dentங்கற வார்த்தைய ஆரம்பத்துல பயன்படுத்துனா, "dent-al" அது பல்.

மொழி அறிவோம் - 1

Heroine - ˈher-ə-wən - முக்கிய பெண் கதாபாத்திரம். ஹீரோயின்னு உச்சரிக்குறோம்.


Heroin - ˈher-ə-wən - போதைப்பொருள் - ஹெராயின்னு உச்சரிக்குறோம்.


ஆனா இரண்டும் எப்படி சொல்லனும்னு அதோட phonetics பார்த்தா, இரண்டும் ஒரே மாதிரி தான் உச்சரிக்கனும். அதாவது, ˈher-ə-wən. குத்துமதிப்பா தமிழ்ல எழுதுனா, ஹெரோவென் என்பது போல். நாக்கை ஒரு மாதிரியாக சுழற்றி ஸ்டைலிஷாக சொல்லிக்கலாம். 


அதாவது, spelling வேறு


Heroine - Heroin 


அர்த்தங்கள் வேறு


முக்கிய கதாபாத்திரம் - போதைப்பொருள்


ஆனா உச்சரிப்பு ஒன்று.


ஹெரோவென் (ˈher-ə-wən)


Wednesday, 17 June 2020

Kindle case crochet பின்னியாச்சு

எப்பவும் ஏதாவது ஒரு விஷயத்த எடுத்து, இத முயற்சி பண்ணி பாரேன்னு சொல்லறது எங்க மனோவுக்கு கைவந்த கலை. எந்த விஷயமா இருந்தாலும் முயற்சி பண்ணி பாத்துடறது தான் நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயமாச்சே. அப்படி தான் இந்த  kindleக்கு கவர் ரெடி பண்ணது.

தினமும் கிண்டிலில் புத்தகம் வாசிப்பேன். ஆனா அதோட கவர் முழுசா உள்ள போட்டு வைக்கற மாடல்ல இருக்கறதால, கிண்டில அப்படியே வெளிய வச்சுடுவேன்.


இதுக்கு க்ரோஷோ கவர் ட்ரை பண்ணுனு மனோ சொல்ல, சரினு மாடல் தேடி கூகிள் போனேன். எந்த appலயும் இந்த case மாடல் கிடைக்கல. Fullஆ கவர் பண்ற மாதிரி crochet மாடல் மட்டும் தான் கிடைச்சது. ஆனா அது மாதிரி ஏற்கனவே பவர் பேங்க்குக்கு பின்னியிருந்தேன். 



இதுவரைக்கும் பின்னுனதே 4 க்ரோஷே தான். Tea coaster, அத கல்யாணத்து முன்ன மனோவுக்கு கிப்ட் பண்ணினேன், குட்டி பாப்பா ட்ரெஸ் ஒண்ணு, அத மனோ தங்கை பாப்பாக்கு ஆசயா அனுப்பினேன். ஆனா shoulder அளவு சரியா வரல. இன்னொன்னு பவர் பேங்க்குக்கு பின்னுனது. நாங்க பயன்படுத்திட்டு இருக்கோம். அப்பறம் சின்னதா ஒரு ஹார்ட்டு. அதாவது 3க்கு அப்புறம் இது ஒரு சின்ன +1. மனோ பிறந்த நாளுக்கு பின்னி அனுப்பியிருந்தேன்.




இதான் சேதிங்கறதால, மாடல் இல்லாத பின்னவும் தெரியாது. மாடலும் கிடைக்கல. ஏதோ ஒண்ணு சர்தான்னு பின்ன ஆரம்பிச்சாச்சு. ஆரம்பம் எடக்குமடக்கா பின்ன தொடங்கி, போகபோக ஐடியா கிடைச்சு, finishing நல்லா வந்தது. கிட்டதட்ட 1.5 மணி நேரம் ஆச்சு.




அது சரி, neatஆ பின்ன ஐடியா கிடைச்சதால, இப்ப பின்னுனது சுமாரா வேற தோணுது 😷 திரும்பவும் மொதல்ல இருந்து இன்னொன்னு பின்ன கிளம்பிட்டேன். 👻

பி.கு: இதுக்கு பயன்படுத்துன க்ரோஷோ needle அளவு 10




Sunday, 12 April 2020

கன்னித்தீவு - ஓர் ஆதித் தெறிப்பு!





ரைட்டர் Saravanakarthikeyan Chinnaduraiயிடம் ஸ்பெஷலாக கையெழுத்திட்டு வாங்கிய இந்தப் புத்தகம் கை சேரும் முன்பே sapiens படிக்கத் தொடங்கி இருந்ததால், parallel readingஇல் 'கன்னித்தீவு' தொடங்கி, ஓர் அத்தியாயம் படித்து முடித்தேன். கிண்டிலில் sapiens கிட்டதட்ட 30% முடித்திருந்த வேளையில், இதைவிட கன்னித்தீவு முதல் அத்தியாயம் கொஞ்சம் அதிக சுவாரஸ்யமாக இருந்ததே என தினமும் மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. இடையில் போட்டி அறிவிப்பு வந்தும் கூட தொடங்க ஒரு motivation வராமலே இருந்தது. ஆனால் அந்த முதல் அத்தியாயம் என்னை விட்ட பாடில்லை. ஒரு வழியாக, சரி parallel reading எல்லாம் வேண்டாம், முதலில் கன்னித்தீவை முடிப்போம் எனப் படிக்கத் தொடங்கினேன்.

ஒரு காதல் மணம் புரிந்த பெண் ஒருத்தி, பழங்குடிகள் இடத்தில் மாட்டிக்கொண்ட பின் நடக்கும் கதை. மானுடவியல் பார்வையில் நிறைய விஷயங்கள் கலந்து செய்த கலவையான கதை.

கர்ப்பகால பரிசோதனை எனத் தொடங்கி அதைத் தொடர்ந்து ஒரு ஃப்ளாஷ்பேக். நாயகி நாயகன் திருமணம். ஏற்கெனவே இவ்வாறொரு திருமணத்தை நேரில் கண்ட அனுபவம் உண்டு என்பதால், நிறைய விஷயங்கள் பொருத்திப் பார்க்க முடிந்தது. பல விஷயங்கள் நிஜத்தில் நடந்தவையோடு அட்சர சுத்தமாக பொருந்தின.

அவனிடம் பழகும் பெண்கள் அவனைக் காதலிக்காமல் இருக்க முடியாது என்பது கொஞ்சம் மிகையாகவே இருந்தது. கவிதைக்கு அழகே மிகைப்படுத்தல்தானே! பையன் கேரக்டர் ஒரு வகையில் இங்கு கவிதை போலத்தான் இருந்தது. அதனால் ஓக்கே.

அதே போல, அந்தப் பெண்ணுக்கு அத்தனை தைரியமா? ஆனால் கொஞ்சம் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு காலை ஒடித்துக் கொண்டவரின் கதை எனக்கு நெருங்கிய வட்டத்திலேயே உண்டு என்பதால் அதைக் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனாலும், கர்ப்ப காலம், கப்பல் பயணம், பழங்குடி இடம் என எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் படிக்கும் நமக்கே 'பக்'கென்று இருக்கும்.

நாயகி பார்வதி கடல் வழியே அந்தப் பழங்குடி இடத்திற்கு செல்லும்போது,

"கடலின் உயிர்ப்பே இதில் தென்படவில்லை. அலைகள் இல்லாமல் என்ன கடல்!" என சலித்துக்கொள்கிறாள்.

கூட வரும் ரஸூல்,

"நடுக்கடலில் இது நமக்குக் காட்டுவது தனது உயிர்ப்பை. குறும்புத்தனத்தை அல்ல; தன் பிரமாண்டத்தை, பெரும்பலத்தை. இது வேறு முகம்" என்று கூறுகிறார்.

அத்தனை ஆத்மார்த்தமாக இந்த வரிகளுடன் மனம் ஒன்றிப்போனது. நடுக்கடலை பார்க்கும் ஆசை உண்டென்றாலும் இன்னும் பார்க்க வாய்க்கவில்லை. ஒருவேளை கடலை பார்த்திருந்தால் இப்படித்தான் மனவோட்டம் இருந்திருக்கும் போலிருக்கிறது.

பின்பொரு முறை பார்வதி நினைக்கிறாள்,

"ஒரு நகைச்சுவை கூட யார் சொல்கிறார் என்பதில்தான் வருவது புன்னகையா, எரிச்சலா என தீர்மானிக்கிறது."

இது எவ்வளவு நிஜமான வார்த்தைகள். சில சமயத்தில் இது பற்றிய குற்றவுணர்வு மனதில் உழலும். ஆனால், இதைப் படிக்கும்போது நிஜமாகவே ஒரு தெளிவு ஏற்பட்டது. நகைச்சுவை நம்பிக்கையான ஒருவர் சொல்லும் போதும், முன்பின் அறிமுகமில்லாதவர் அதைச் சொல்லும் போதும், நாம் நம்பாத ஒருவர் அதை சொல்லும்போதும் வேறு வேறு உணர்வு ஏற்படுவது சகஜம் தானே. நமது protective intuition அவ்வாறு நடந்துகொள்ளச் செய்வதில் என்ன தவறு இருக்கிறது. எடுத்தவுடன் உரிமை எடுத்துக்கொள்பவன் மீது நம்பிக்கை எப்படித் துளிர்க்கும்? இந்த விஷயத்தில் இந்தப் புத்தகம் எனக்கு ஒரு eye opener.

அவனுக்கு அப்படி ஒரு முடிவு ஏற்பட்டது, ஒரு வகையில் மனதின் வன்மத்திற்கு தீனி போடுவதாகவே இருந்தது. மற்றபடி, நிக்கியை போன்ற அபத்தங்கள் உலகெங்கும் தென்படக்கூடிய ஜந்துக்களே.

அடுத்தாக, அந்தப் பழங்குடிகளிடம் பார்வதி பழகுவது. முதல் ஆபத்தில் குழந்தை மூலமாகத் தப்பித்த பின், மொழி தெரியாத இடத்தில் எப்படியெல்லாம் உழல்வோம், கவனிக்கப்படாத இடத்தில் எந்த அளவுக்கு தவறு என்று எண்ணப்படும் விஷயங்களைச் செய்ய மனம் ஒப்புக்கொள்ளும், எங்கு எதிர்க்கும், மனதின் விசித்திரங்கள் எல்லாம் கோக்கப்பட்டது அருமை.

"எந்த இயற்கை சங்கதியும் மனிதர்களை அஞ்சுகிறது. அவனது வரலாறு அப்படி!"

இந்த வரிகள் ஆரம்பத்தில் படித்த sapiens புத்தகத்தை நினைவுக்கு இழுத்துவிட்டது. எப்படிப் பார்த்தாலும் ஆமாம் தானே! அப்படியான மோசமான நிலைமையை உண்டாக்குபவர்கள் தான் நாம். சுனாமிக்குத் தப்பிக்க ஒரு பெரிய மரத்தை நோக்கி பழங்குடிகளுடன் ஓடும் பார்வதி, மரத்தைப் பார்த்தவுடன், "இதை வெட்டி வீழ்த்தினால் ஒரு ஜமீன் பங்களாவுக்கு தேவையானதை அருளும்" என்று நினைக்கிறாள், பின்பு எல்லாமே தீப்பற்றி எரிந்து போவதை கற்பனை செய்து பார்க்கிறாள்.

நிஜத்தில் இப்படியான அபத்த கற்பனை நிறைந்தவர்கள் தானே நாம்? இங்கே யாருமே இல்லை என்று சொல்லி விட முடியாத அளவு, பற்பல தருணங்களில், பல விதமான வித்தியாசமான, அபத்தமான, நினைக்க விரும்பா சிந்தனைகளுடன் உலவுபவர்கள் தானே நாம். ஆனால், எத்தனை சீக்கிரம் வெளியே வந்து நிஜத்துடன் ஒன்றிக் கொள்கிறோமோ, அத்தனை தூரம் பைத்தியமாவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறோம்.

நிக்கியின் தவறான பார்வை குறித்து ரசூல் நிக்கியிடம் எதுவுமே கேட்காமல் இருப்பது மோசமாகத் தோன்றினாலும், இங்கு நிஜம் அது தான். கோழையாக அல்லது நமக்கு என்ன என்று நகர்ந்து போவதே பெரும்பாலனவர்கள் செய்யக்கூடியது. அவள் படகில் தூங்கும்போது துப்பட்டாவை கொண்டு மூடியது போல், தங்கள் வட்டத்திற்கு பிரச்னை வராதவாறே உதவிகள் செய்வார்கள். மிகச்சில தருணங்களில் தட்டிக்கேட்டவர்களின் முகமும், நீ தூரமா இருந்துக்கோ, அவன் மூஞ்சிலயே முழிக்காத போன்ற அறிவுரைகளும் கண்முன் வந்து சென்றன. :)

இந்த கதையில் பல விஷயங்கள் கதையாகத் தோன்றாமல், நிஜம் போலவே தோன்றக் காரணம் அந்த இடங்களைப் பற்றிய அறிவும், அம்மாதிரியான மனிதராக இருப்பதோ அல்லது அம்மாதிரியான மனிதர்களோடு பழகியிருப்பதோ தான் காரணம் என்று கூறுமளவிற்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தக்கூடியது.

மரியா. என்னதான் யாருக்கு யார் வேண்டுமானாலும் சொந்தம் என்ற சமூகத்தில் பிறந்தாலும், எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது, பெரும்பாலானோர் இங்கு தாலி கட்டி பெண்ணை சொந்தமாக்கிக் கொள்வதை ஆதரித்தாலும். Open relationship, dating ஆகியவற்றை ஆதரிப்போரும் இருக்கிறோம் அல்லவா? Spur of the momentல் செய்ததாய் தோன்றிய கொலை. ஒரே வேளை சின்ன இடைவெளி கிடைத்திருந்தாலும் கையில் காலில் விழுந்து மன்னிப்பு பெற்றிருக்கக்கூடும்.

கதை முடிவு, பார்வதியும் குழந்தையும் காய்ச்சலுக்கு தப்பியதும், மரியாவும் அவள் குழந்தையும் இறந்ததும் அறிவியலின் வளர்ச்சியை சொல்லும் விதமாக இருந்தது அருமை.

கதாபாத்திரங்கள் மூலம் நிறைய விஷயங்கள் கூறியிருக்கிறார். கலப்புத் திருமணம், பார்ப்பனியம், அரசியல், உணவு, மருத்துவம் எனப் பல்வேறு விஷயங்கள். தகவல்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், எதுவும் துருத்திக்கொண்டிருப்பதாய் தோன்றவில்லை.

ஒரு வகை easy learning. தகவல்களைப் பொருத்தவரை நிறைய தேடியிருப்பதற்கான உழைப்பு நன்றாகத் தெரியும்.

மற்றபடி, நிஜமாகவே ஒரு படம் பார்த்த உணர்வு இருக்கும். ப்ரேக் எதுவும் விடாமல், 'ஒரே மூச்சில்' படித்து முடித்து விடக்கூடும்.

புத்தகம் முழுக்க அவ்வளவு காதல். ஒருவர் அவ்வளவு காதல் வயப்பட்ட பின், அந்தக் காதலைப் பற்றி நொடிக்கொரு முறை நினைக்கவே தோன்றும். அப்படி அவள் ஓராயிரம் முறை முருகனை நினைக்கிறாள். எல்லா இடங்களிலும் அவனைப் பற்றிய நினைவைக் கொண்டோ அல்லது அவனைப் போல யோசித்தோ, அவன் இடத்தை நிரப்பியே வைத்திருக்கிறாள். காதல் ❤️

கதையோடு இயல்பாக இல்லாமல் எனக்குத் தோன்றிய விஷயங்கள்,

1. பார்வதிக்கு அவ்வளவு பக்கத்தில் due date இருந்தும் அவ்வளவு தூரத்தில் அரசு சம்மந்தமான வேலைக்கு அனுப்பப்பட்டது
2. எல்லாப் பிரச்னைகளிலும் அவள் மட்டும் தப்பித்தது. (ஆனால் அது இல்லையென்றால் கதையே இல்லை இல்லயா?)
3. பார்வதி திரும்பிய காட்சி. தொங்கி சாகசம் செய்து ஹெலிகாப்டரில் ஏறியது.

மொத்தத்தில் நல்ல நாவல். Worth the time. நிச்சயம் படிக்கலாம்.

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...